வீட்டில் தனியாக இருந்த பெண்.. மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை - துணியை வாயில் அடைத்து கட்டிப் போட்ட கொள்ளையர்கள்..!

0 476

சென்னையை அடுத்த காரம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மயக்க மருந்து கொண்ட துணியை வாயில் அடைத்தும், கைகால்களை கட்டிப்போட்டும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்த சாந்தி தனது 3 அடுக்கு கொண்ட வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டின் மெயின் கேட் பூட்டாமல் இருந்த போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், காலிங் பெல்லை அழுத்தி உள்ளனர்.

உள்ளே இருந்த சாந்தி கதவைத் திறந்து பின்னர் இரும்பு கிரில் கேட்டை திறந்து உள்ளார். அப்போது திடீரென மர்ம நபர்கள் சாந்தியின் வாயை பொத்தி, மயக்க மருந்தை தெளித்து, கை, கால்களைக் கட்டி அவர் அணிந்திருந்த 10 சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த 15 சவரன் நகையை கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டின் முதல் தளத்தில் உள்ளவர்கள் சாந்தியின் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு, உள்ளே சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வீட்டில் தனியாக உள்ள பெண்கள், டோர் லென்ஸ் மூலம் முதலில் வந்துள்ளவர்கள் யார் என்பதை பார்த்து, எதற்காக வந்துள்ளீர்கள் என கேட்டு விசாரிக்க வேண்டும் என்றும், கதவை திறந்தாலும், கிரில் கதவை தேவையின்றி திறக்கக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments