போலீஸ் எனக் கூறியும் மதுபோதையில் போலீசை தாக்கிய கும்பலில் மேலும் 6 பேரை கைது செய்த போலீசார்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே போலீஸ் எனக் கூறியும் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜசேகரனை மதுபோதையில் தாக்கிய கும்பலை சேர்ந்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 26ஆம் தேதி ராஜசேகரன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வாழ்குடை கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே 6 பேர் கும்பல், ஒருவரை தாக்கியதைப் பார்த்து அதனை தட்டிக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து ராஜசேகரனிடம் தகராறு செய்த அந்த கும்பல், அவர்களது நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்து தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக முக்கூர் கிராமத்தை சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தினேஷ்குமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
Comments