ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்த பந்தயத்திற்காக தீவுத்தடலை சுற்றி உள்ள அண்ணா சாலை, பல்லவன் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி சந்திப்பிலிருந்து நேப்பியர் பாலம் வரையிலும், காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை சந்திப்பிலிருந்து நேப்பியர் பாலம் வரையிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments