நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தி.மு.க. எம்.எல்.ஏ. வீடு முன்பு தீக்குளிப்பு முயற்சி.. தற்கொலைக்கு முயன்ற நபரை 60 சதவீத தீக்காயங்களுடன் மீட்ட போலீசார்
திருப்பரங்குன்றத்தில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மானகிரி கணேசன் என்பவர் 60 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆவினில் உள்ள திமுக தொழிற்சங்கத்தின் கௌரவத் தலைவராக உள்ள கணேசன், தளபதிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி தீக்குளித்ததாக கூறப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments