Ex பெண் இன்ஸ்பெக்டர் கொலை.. மதிமுக மாவட்ட செயலாளர் , அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி..! 20 வருஷம் கூடா நட்பு கேடானது

0 758

ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் மற்றும் அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில்,  அதிமுக பிரமுகர் உடல்நலக்குறைவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் விருப்ப ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கஸ்தூரி தனது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பிணக்கூறாய்வில் அவரது தலையில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கை விசாரித்தனர்.

கஸ்தூரியுடன் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்த மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதியை பிடித்து விசாரித்த போது கஸ்தூரி மரணத்துக்காண மர்மம் விலகியது.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கஸ்தூரியுடன் கடந்த 20 வருடத்துக்கு மேலாக வளையாபதி நட்பாக இருந்துள்ளார். 61 வயது ஆகிவிட்டதால் கஸ்தூரி வீட்டை விற்றுவிட்டு டெராடூனில் உள்ள தனது மகனிடம் சென்று விட முடிவு செய்துள்ளார்.

வளையாபதியிடம் வீட்டை விற்க உதவுமாறு கூறியுள்ளார். மற்றவர்கள் வீட்டின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என்ற நிலையில், வளையாபதியோ வீட்டிற்கு 70 லட்சம் ரூபாய்தான் தேறும் என்று குறைத்து கூறியதால் கஸ்தூரி வளையாபதியுடன் செல்போனில் சத்தம் போட்டுள்ளார்.

வளையாபதிக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் பிரபு என்பவர் நேரடியாக கஸ்தூரியின் வீட்டுகே சென்று சத்தம் போட்ட போது வாக்குவாதம் முற்றியதில் கஸ்தூரியை ஹெல்மெட்டால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் மூர்ச்சையாகி கீழே விழுந்த பின்னர் அங்கு வந்த வளையாபதியுடன் சேர்ந்து கஸ்தூரியின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக பிரபு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே போலீஸ் விசாரணையின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரபுவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments