“குழந்தை உனக்கு பிறக்கலையா”.. சுடுசொல்லால் சூறாவளியான பெண்.. கணவனை விரட்டி வெளுத்த சம்பவம்..! மும்முனை தாக்குதலால் தலைதெறிக்க ஓட்டம்

0 1025

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து , பிரிந்து வாழும் தனது கணவரை, மனைவியும், அவரது உறவினர்களும், விரட்டி விரட்டி அடி வெளுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கைக்குழந்தையுடன் தவிக்க விட்டுச்சென்ற தனது கணவனை, மனைவியும் அவரது உறவினர்களும் வெளுக்கும் காட்சிகள் தான் இவை..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த தீன தயாளன் மற்றும் பாரதி பிரியா ஆகிய இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் சந்தேகத்தை கிளப்பி பிரிந்து சென்றதாக கூறப்படுகின்றது.

இது குறித்து இரு தரப்பிலும் போலீசில் புகார் தெரிவித்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக மாவட்ட ஆட்சி தலைவர் வளாகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த தீனதயாளனிடம் தனது வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லுமாறு மனைவி பாரதி பிரியா கேட்க அவரை உந்தி தள்ளிவிட்டுச்சென்றதால் அவரை பிடித்து அடிக்க துவங்கினார் பாரதி பிரியா

குழந்தையை உனக்கு பிறக்கவில்லை என்று சொல்வாயா ? என்று கேட்டு மனைவியின் தாய் மற்றும் சகோதரியும் தீனதயாளனை விரட்டி விரட்டி செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் சுற்றி வளைத்து நிகழ்த்தப்பட்ட மும்முனை தாக்குதலால் நிலைகுலைந்த சந்தேகக் கணவர் தீனதயாளனோ தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பு புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments