நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சாலையில் கிடந்த வெடிபொருள் பை - உள்ளே இருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்..!
ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்த பையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற மீனவர் நேற்று இரவு மீன்பிடித் தொழிலுக்காக பைக்கில் கொண்டு சென்ற வெடி பொருட்கள் அடங்கிய பை சாலையில் தவறி விழுந்ததும், அதை அறிந்த அவர் தலைமறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Comments