நில அளவைக்காக லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய நில அளவையர், இடைத்தரகர் கைது..!

0 305

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் ராமமூர்த்தி மற்றும் இடைத்தரகர் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காரணையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை சுரேஷிடமிருந்து, இடைத்தரகர் சரத்குமார் பெற்று அதை நில அளவையரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments