8 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓவிய ஆசிரியர் தன்னிடம் அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் ராமச்சந்திரசோனி பல மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் அளித்த புகாரில் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments