12 தொழில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் செலவில் நாட்டில் 12 தொழில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று டெல்லியில் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதன் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 30 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தொழில் தொடங்க விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த திட்டம் இருக்கும் என்றும் அஷ்விணி வைஷ்ணவவ் தெரிவித்தார்.
Comments