கமலா ஹாரிஸுடன் டி.வி.யில் செப்.10-ல் விவாதம் - டிரம்ப் ஒப்புதல்..!
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியாவில் ஏ.பி.சி ஃபேக் நியூஸ் தொலைக்காட்சியில் இந்த விவாதம் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் மாதம், சி.என்.என் தொலைக்காட்சியில் ஜோ பைடனுடன் நடைபெற்ற விவாதத்தின்போது கடைப்பிடிக் விதிமுறைகள்தான் இந்த முறையும் கடைப்பிடிக்கப்படும் என தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். பார்வையாளர்கள் இல்லாமல், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இருவரும் கையில் குறிப்புகள் ஏதும் இல்லாமல் விவாதத்தில் கலந்துகொள்வார்கள்.
Comments