கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத்தலைவர் மீது தாக்குதல்..!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முப்புளி கிராமத்தில், கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மோதல் வழக்கில் தங்களது வீடுகளை போலீசாருக்கு அடையாளம் காட்டிய ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரை மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து சதீஷ் மற்றும் விமல் தாக்கியதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments