நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த இளைஞர்.. கீழே விழுந்த போது பேருந்து தலையில் ஏறியதில் உயிரிழப்பு..!
சென்னை காசிமேட்டில் சாலையில் இருந்த பள்ளத்தை பார்த்ததும் திடீரென பைக்கை நிறுத்திய ஹெல்மெட் அணியாத இளைஞர் பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில் நிலை தடுமாறி விழுந்ததில் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசாருதீன் திருவொற்றியூரில் உள்ள தான் பணிபுரியும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை சர்வீஸ் சென்டருக்கு வேலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காசிமேட்டில் இந்து மயான பூமி அருகே பள்ளம் இருப்பதை பார்த்து பிரேக் பிடித்தபோது பின்னால் வந்த மாநகரப் பேருந்து மோதியதில் நிலைதடுமாறி விழுந்த நிலையில், அந்த பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் ரப்பீஸ் கற்களை கொண்டு பள்ளத்தை நிரப்பினர்.
Comments