வீட்டில் தூக்கிட்ட நிலையில் 31 வயது பெண் சடலம்... சாவில் சந்தேகம் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல்

0 584

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அகர ஏலத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரபு கேரளாவில் பணியாற்றிவரும் நிலையில், அவரது மனைவி சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

3 பெண் குழந்தைகள் உள்ளதை சுட்டிக்காட்டி கணவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததே சுகன்யாவின் முடிவுக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments