நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
நாமக்கல்லில் மது போதையில் இளைஞர் காரை ஓட்டி விபத்து... எனக்கு வாழ்க்கையே வேண்டாம் என புலம்பல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்.
ஒரு கையில் மதுபாட்டிலை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், காரில் இருந்து இறக்கிவிடப்பட்ட சபரிநாதன் என்ற அந்த இளைஞர் என் வாழ்க்கையே போய்விட்டது, எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் என போதையில் புலம்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சபரிநாதனின் காரை பறிமுதல் செய்த ராசிபுரம் போலீசார் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிய பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
Comments