லிப்ட் கொடுத்தாலும் சிக்கல் தான்..! அய்யோ 1000 ரூபாய் அபராதமா..? வயிற்றில் அடித்து கதறிய காட்சி..! டிராபிக் போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுப்பா..!

0 1000

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்று வாகன ஓட்டிக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் வயிற்றில் அடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உள்ள போஸ்ட் ஆபீஸ் அருகில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாதவரை பின்புறம் அமரவைத்து அழைத்துச் சென்ற தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டியை மடக்கி பிடித்தனர்.

பின்னால் அமர்ந்து இருந்தவர் தலைகவசம் அணியாமல் சென்றதால் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அபராத தொகையை கட்ட வேண்டும் எனக்கூறியதாக கூறி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் வயிற்றில் அடித்து கொண்டும் தலைகவசத்தை கீழே அடித்தும் கதறி அழுதார்.

கடந்த 20 நாட்களாக ஈகா தியேட்டர், சங்கம் தியேட்டர் என பல்வேறு இடங்களில் ஜீரோ ஆக்ஸிடென்டல் டே நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக ஆடியோ செட்டு போட கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் எங்கும் பணம் வாங்காமல் இலவசமாக போட்டுக் கொடுத்துள்ளேன். ஆனால் என்னிடமே அபராதம் விதித்து பணத்தை கேட்கிறார்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் இருந்தால் நான் ஏன் சுற்றி வருகிறேன் என நெஞ்சில் அடித்துக் கொண்டு போக்குவரத்து போலீசாரிடம் கதறினார்

இதனை வீடியோ பதிவு செய்த பெண்மணி ஒருவரின் செல்போனை பிடுங்கியதோடு அவரை தாக்க முற்பட்டதாக பெண்மணி ஒருவர் குற்றம்சாட்டினார்

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த தணிகாசலம் என்பதும், அவரது நண்பரோடு பாரீஸ் சென்று விட்டு வந்தவரிடம் பின்னால் அமர்ந்து இருப்பவர் தலைகவசம் அணியாததால் அபராதம் மட்டுமே விதித்ததாகவும், அவரே தனது தவறை உணர்ந்து அபராத தொகையை கட்டியதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments