கனடாவில் நடத்தப்பட்ட கிளிப் டைவிங் போட்டியில் சாகசம் செய்த வீரர்கள்

0 413

கனடா நாட்டில் நடத்தப்பட்ட செங்குத்தான உயரத்தில் இருந்து குதிக்கும் கிளிப் டைவிங் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர். மகளிர் பிரிவில் கனடா வீராங்கனை மோலி கார்ல்சன் தண்ணீரில் குதித்தபோது உடலை பல முறை சுழற்றி கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

கிளிப் டைவிங்கில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ரியானான் இஃப்லாண்ட் இரண்டாவது இடமும் , அமெரிக்க வீராங்கனை கெய்லியா ஆர்னெட் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் எய்டன்ஹெஸ்லாப் உடலை பம்பரம் போன்று சுழன்றபடி தண்ணீரில் குதித்து கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். ருமேனியாவின் கான்ஸ்டன்டின் போபோவிசி இரண்டாவது இடமும், மெக்சிகோ வீரர் யோலோட் மார்டினெஸ் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments