பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண் உயிரிழப்பு..!
தேனியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலியானதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயப்பிரியாவுக்கு கடந்த 21 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்கு பின்னர் அவருக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயப்பிரியாவுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கடந்த 22 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments