நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கார் ஓட்டி பழகும்போது எதிரே சென்ற ஸ்கூட்டியின் மீது மோதி விபத்து - படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு..!
தூத்துக்குடி சிதம்பரம் நகரில் சுப்பையா என்பவர் கார் ஓட்டி பழகியபோது எதிரே சென்ற ஸ்கூட்டியின் மீது மோதியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 24ஆம் தேதி சுப்பையா தனது நண்பரின் வழிகாட்டுதலோடு காரை ஓட்டும்போது சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக காரை வலதுபுறமாக திருப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே ஸ்கூட்டியில் சென்ற ஜெயா என்ற பெண் மீது மோதி சாலையோரம் இருந்த கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments