நேருக்கு நேர் மோதி கொண்ட பைக், கார்.. ஒருவருக்கு துண்டான வலது கால் - நெல்லையில் நடந்த கோர விபத்து..!
நெல்லை மாவட்டம் கரம்பை பகுதியில் பைக்கும் காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற ஒருவருக்கு வலது கால் துண்டான நிலையில் மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சுடலைமுத்து இருவரும் அதிவேகமாக பைக்கில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த பைக் கரம்பை அருகே சாலையின் எதிரே வந்த மாருதி கார் மீது மோதியதில் கோகுல் காயமடைந்த நிலையில் சுடலை முத்துவின் வலது கால் துண்டானதாகப் போலீசார் தெரிவித்தனர்.
Comments