கண்ணா கருமை நிறக் கண்ணா..! கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்.!
கண்ணன் பிறந்த தினமான இன்று ஜன்மாஷ்டமியாக நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். முக்கியக் கோவில்களில் சிறப்பு ஆரத்திகள் நடைபெறுகின்றன. திருமாலின் பத்து அவதாரங்களில் பகவத் கீதையை தந்தருளிய கண்ணனின் லீலைகள் குறித்த செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்....
கண்ணன் பிறந்தது சிறைச்சாலையில், தனது கொடிய மாமனால் கொல்லப்படக்கூடாது என்று அவரது தந்தை வாசுதேவர் கூடையில் குழந்தையை வைத்து, யமுனை ஆற்றைக் கடந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஆயர்பாடியில் பிள்ளையாய் வளர்ந்த கண்ணனுக்கு யசோதையின் தாலாட்டு சுகமானது.
கோகுலத்தில் வளர்ந்த கண்ணனின் லீலைகள் அவன் சாதாரண பிள்ளை இல்லை என்று உலகிற்கு உணர்த்தியது
காதலுக்கு நாயகனாகவும் கண்ணன் கொண்டாடப்படுகிறான்....ராதை ருக்மணி பாமா மீரா என பெண் பாத்திரங்கள் மூலமாக கண்ணனின் காதல் தெய்வீக அனுபவமாக மாறுகிறது.....
பத்து தசாவதாரங்களில் மனித வடிவில் பிறந்த ராமனைத் தொடர்ந்து, கண்ணனின் அவதாரம் புகழ் பெற்றதாகும்.
விளையாட்டுப் பிள்ளையாக அறியப்பட்ட கண்ணன் விஸ்வரூபம் எடுத்து, மகாபாரதப் போர்க்களத்தில் பகவத் கீதையை வழங்கிய ஞானத் தந்தையாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
Comments