தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலத்துக்காக மாமியாரை ஆள் வைத்துக் கொல்ல முயற்சி... மருமகளும் கூலிப்படை ஆசாமியும் கைது
திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் 60 வயதான ஜகதாம்பாள் தனியாக வசித்து வரும் நிலையில், அவரது பெயரில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு மருமகள் ஜான்சி ராணி கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆத்திரத்தில் உடல்நிலை சரியில்லாமல் கிடந்த ஜகதாம்பாளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்த ஜான்சி ராணி, மாமியாரை கொலை செய்தாவது நிலத்தை அபகரிக்க முடிவு செய்து, தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியிலிருந்து சீனிவாசன் என்பவனை வரவழைத்துள்ளார்.
உறவினர் என்று கூறி, ஜகதாம்பாளுக்கு உதவிகள் செய்வது போல் சீனிவாசனை பழகவிட்டுள்ளார். நேற்று யாரும் இல்லாத நேரத்தில் சீனிவாசன் ஜகதாம்பாளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயலவே, அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் சென்று காப்பாற்றியுள்ளனர்.
Comments