சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா

0 534

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்ற 64-வது பிரம்மோற்சவ விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் இரண்டாவது நாளில், சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பேரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தையடுத்த வண்டுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள வண்டுறைமாரியம்மன் ஆலயத்தில் ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமிலங்காடு கிராமத்தில் உள்ள சுயம்பு ஆதி நாகாத்தம்மன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தி காவடி எடுத்து வந்து வழிபாடு மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments