பரனூரில் 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
செங்கல்பட்டை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பரனூர் முதல் புலிப்பாக்கம் வரையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் எதிர்திசையில் திருப்பி விடப்பட்டதால் ஒரே பாதையில் வாகனங்கள் சென்று வந்தன.
Comments