தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் கவுண்ட்டவுன் வெளியிட்ட தொழிலதிபர் கைது..!
தனது தம்பி கொலைக்கு பழி வாங்கும் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் என பேஃஸ்புக்கில் பதிவிட்ட தொழிலதிபரை செங்குன்றம் போலீஸார் கைது செய்தனர். செங்குன்றத்தில் கடந்தாண்டு அ.தி.மு.க பிரமுகரான பார்த்திபன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி முத்துசரவணன் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், பார்த்திபனின் அண்ணன் நடராஜன் தனது பேஃஸ்புக் பக்கத்தில் தனது தம்பிக்கு நடந்த துரோகத்திற்கு கவுண்ட்டன் ஆரம்பமாகி விட்டது என பதிவிட்டிருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
Comments