நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்..!
தேனி மாவட்டம் கம்பம் கோம்பை ரோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை இதுவரை பிடிபடவில்லை. தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வனக் காவலரை சிறுத்தை தாக்கிய நிலையில், அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுத்தையின் தடத்தை வனத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தையைத் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினரும் காவல் துறையினரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Comments