பழுதாகி சாலையோரம் நின்ற லாரி மீது மோதிய மற்றொரு லாரி.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே பழுதாகி சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் வந்து அதிவேகமாக மோதி உருக்குலைந்த லாரிக்குள் சிக்கி உயிரிழந்த ஓட்டுநரின் உடலை கிரேன் உதவியுடன் லாரியின் சிதைந்த பாகங்களை உடைத்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து கொல்கத்தாவிற்கு பேப்பர் பண்டல்கள் ஏற்றி சென்ற லாரி சேலம் கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மங்கரங்கம்பாளையம் பகுதியில் பழுதாகியுள்ளது. சுங்கச்சாவடி ஊழியர்களின் உதவியுடன் உரிய பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தி லாரியில் பழுது பார்க்கும் பணி நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ஆட்டோ உதிரி பாகங்கள் ஏற்றிக் கொண்டு ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த லாரி அதிவேகமாக மோதியதாக கூறப்படும் நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Comments