சொல்வதெல்லாம் பொய்... 3 வது காதல் தொடர்ந்ததால் வங்கி பெண் அதிகாரி கொலை..! வாரிசை மீட்டுக் கொடுக்க வாக்குவாதம்

0 992

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வேறு பெண்ணின் கணவரை 2 வது திருமணம் செய்த பஞ்சாயத்தில் சிக்கி, திருந்துவதாக வெளியே வந்த வங்கி பெண் அதிகாரி, 3 வதாக ஆட்டோ ஓட்டுனரை காதலித்து குடும்பம் நடத்திய நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது ஆண் வாரிசை கேட்டு 2 கணவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

9 வருடங்களுக்கு முன்பு... வேறு ஒரு பெண்ணின் கணவரை 2 வதாக திருமணம் செய்த பஞ்சாயத்தில் சிக்கி அவமானப்பட்டதோடு தனக்கு பிறந்த குழந்தையை தானே வளர்ப்பதாக ஒப்புக் கொண்டு சொல்வதெல்லாம் உண்மை என்று கண்ணீர் மல்க எழுந்து சென்ற இவர் தான் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரமணி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரமணி. 33 வயதான இவர் வங்கி ஒன்றில் ஆயுள் காப்பீட்டு திட்ட அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில். கடந்த 21ந்தேதி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். மனைவி ரமணியின் நடத்தையில் எழுந்த சந்தேகத்தால் அடித்துகொலை செய்ததாக 3 வது கணவரான ஆட்டோ ஓட்டுனர் அசோக் என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ரமணிக்கும், 2 வது கணவரான வெங்கடேசனுக்கும் பிறந்த ஆண் குழந்தையும், அசோக்கிற்கும் , ரமணிக்கும் பிறந்த ஆண்குழந்தையும் தற்போது அசோக்கின் பெற்றோரிடம் இருப்பதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ரமணி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த வெங்கடேசன் , தனக்கு பிறந்த ஆண் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கள்ளக்குறிச்சி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார் வெங்கடேசன். இது தொடர்பான விசாரணை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்தது. அப்போது அந்த இரு குழந்தைகளையுமே ரமணி வளர்க்கவில்லை என்றும் கடந்த 5 வருடங்களாக தாங்கள் தான் வளர்ப்பதாக கூறிய அசோக்கின் பெற்றோர் குழந்தையை கொடுக்க மறுத்து விட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது வெங்கடேசன் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பெண் காவலர் ஒருவருக்கும் கடுமையான வாக்குவாதம் உண்டானது

இதையடுத்து 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வரவைத்து அந்த வழக்கறிஞர் உரிமைக்குரல் எழுப்பிய நிலையில் , நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் காவல் ஆய்வாளர் சரஸ்வதி இரு தரப்பையும் வெளியே அனுப்பி வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு முன்பு நின்று சத்தம் போட்டுவிட்டு சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments