நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் நீடித்த மின் தடை - கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றிரவு 3 மணி நேரம் நீடித்த மின்வெட்டால் அவதியுற்றதாக கர்ப்பிணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஜெனரேட்டரை இயக்கும் முயற்சி பலனளிக்காமல் போனதாகக் கூறப்படும் நிலையில், தாமதமாக வந்த மின்வாரிய ஊழியர்கள், பழுதை சரிசெய்து, மின் இணைப்பு கொடுத்தாகக் கூறப்படுகிறது. இன்னும் 2 மணி நேரம் மின்வெட்டு நீடித்திருந்தால், அவசர கால சிகிச்சைக்காக சேமிக்கப்பட்டிருந்த ரத்த பாக்கெட்டுகள் கெட்டு வீணாகி இருக்கும் என செவிலியர்கள் தெரிவித்தனர்.
Comments