இங்கிலாந்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் பெண் கலைஞர் 16 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம்

0 449

இங்கிலாந்தில் 16 அடி உயரத்தில் நாற்காலியில் அமர்ந்து வித்தை காட்ட முயன்ற பெண் சர்க்கஸ் கலைஞர் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்ததில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிழக்கு சஸ்செக்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தரத்தில் இறுக்கமாகக் கட்டப்பட்ட கயிற்றின் மீது இரண்டு ஆண் கலைஞர்கள் கம்பியை சுமந்து நின்ற நிலையில், அதில் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் கலைஞர் நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

கீழே மெத்தை போன்ற பாதுகாப்பு தளத்தைத் தாண்டி, இரும்புத்தளத்தில் விழுந்ததால் பெண் கலைஞர் காயமடைந்ததாகவும் மற்ற கலைஞர்கள் கயிற்றைப் பிடித்து தப்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments