ரசாயனத் தொழிற்சாலை பயங்கர தீ விபத்து.. 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் மதிய ஷிப்டில் சுமார் 380 தொழிலாளர்கள் வேலை செய்த நிலையில் ரியாக்டர் வெடித்த உடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொழிற்சாலையில் பற்றிய தீ தொழிலாளர்கள் மீது பரவியும், வெடித்த ரியாக்டரில் பாகங்கள் மோதியும் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
Comments