திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை கத்தியால் குத்திய இளைஞர் கைது

0 503

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.

கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் உடன் படிக்கும் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மாணவர் பரத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட பரத்திடம் அவரது தாயார் சந்திரகுமாரி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமுற்று அலறிய சந்திரகுமாரியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments