மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கைக்குழந்தைகளுடன் விழுந்த பெண்கள் - வீடியோ வெளியாகி பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறை தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதை அறியாமல் கை குழந்தைகளுடன் சாலையைக் கடந்த 3 பெண்கள் அடுத்தடுத்து விழுந்தனர்.
வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் கிடப்பதாகக் கூறப்படும் நிலையில், 3 பெண்கள் விழுந்த பள்ளத்தில் அடுத்து வந்த முதியவர் ஒருவரும் தவறி விழுந்தார்.
மழை நீர் நிரம்பிய பள்ளங்களில் பொதுமக்கள் விழும் காட்சிகள் பரவிய நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் அவற்றை கான்கிரிட் கலவை போட்டு மூடும் பணியில் ஈடுபட்டனர். இதனை முன்கூட்டியே செய்திருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்திருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Comments