ரயில் மோதி தந்தை, மகள் உடல் சிதறி பலி - கல்லூரியில் சேர்த்துவிட்டுத் திரும்பியபோது நடந்த பரிதாபம்

0 473

அரியலூர் அருகே, ரயிலில் அடிபட இருந்த தந்தையை காப்பாற்ற முயன்ற மகளும் ரயில் மோதி இறந்தார்.

மாற்றுத்திறனாளியான பிச்சைபிள்ளை, தனது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டு, பின் தன் இரு மகள்களுடன் செந்துறைக்கு ரயிலில் திரும்பியுள்ளார்.

அங்கு உயர்மட்ட நடை மேம்பாலம் இல்லாததால், பிச்சைபிள்ளை, கால்களை தாங்கி தாங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வருவதை கவனித்த மூத்த மகள் பழனியம்மாள், ஓடிச் சென்று தந்தையை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, இளைய மகள் தேவியின் கண் எதிரே, ரயில் மோதி பிச்சைபிள்ளையும், பழனியம்மாளும் உடல் சிதறி இறந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments