சென்னை விமான நிலையத்தில் 780 நட்சத்திர ஆமைகள், 1,500 இ-சிகரெட்டுகளும் பறிமுதல்

0 336


சென்னை, விமான நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள் மற்றும் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நட்சத்திர ஆமைகளை அட்டைப்பெட்டிகளில் அடைத்து மலேசியாவிற்கு கடத்தி செல்ல முயன்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம், யூசூப் மற்றும் அஸ்ரப் ஆகியோரிடமும், மலேசியாவிலிருந்து உடமைகளில் வைத்து ஆயிரத்து 500 இ-சிகரெட்டுகளை கடத்தி வந்த ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments