ரவுடி "தூத்துக்குடி செல்வத்தை" துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்..!
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற தூத்துக்குடி செல்வம் என்ற ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
6 கொலை வழக்கு உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய செல்வம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. சுசீந்திரம் பகுதியில் அவர் மறைந்திருப்பதாக தகவல் அறிந்து போலீசார் பிடிக்க சென்ற போது, செல்வம் தாக்கியதில் வலது கையில் காயமடைந்த அஞ்சு கிராமம் எஸ்.ஐ. லிபி பால்ராஜ்க்கும், தற்காப்புக்காக போலீசார் சுட்டத்தில் வலது காலில் குண்டடி பட்ட செல்வத்திற்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Comments