விதிகளை மீறி நின்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார் - தந்தையுடன் மகன் உடல் நசுங்கி பலி..!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புறவழிச்சாலையில் சென்ற காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வேகமாகச் சென்று, விதிகளையும், போலீசாரின் எச்சரிக்கையை மதிக்காமலும் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் புறம் மோதியதில், கார் நசுங்கி, அதில் பயணம் செய்த தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை, கிண்டியை சேர்ந்த ரத்தினசாமி சேலத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, தனது மூத்த மகன் வேல்முருகன் மற்றும் இளைய மகன் ரமேஷ் ஆகியோருடன் சென்னைக்கு திரும்பும் போது நத்தமேடு பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ரத்தினசாமி, ரமேஷின் உடல்களை மீட்டு திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காரை ஓட்டிய வேல்முருகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments