குடும்பத்துடன் பைக்கில் சென்ற நபர்.. பின்னால் அதிவேகமாக வந்து மோதிய சிறுவர்கள் - சிசிடிவி வைத்து போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் மேட்டூரில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் தூக்கி வீசப்படுவது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கூலி லைன் பகுதியைச் சேர்ந்த குமாரவடிவேல் என்பவர் தமது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஹெல்மெட் அணியாமல் மேட்டூர் நான்கு ரோட்டில் இருந்து தூக்கணாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இவர்களுக்கு பின்னால் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் சென்ற சிறுவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் ஆறு பேரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
Comments