திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
திருவண்ணாமலையில், பௌர்ணமியையொட்டி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
நடைபாதை பெட்டிக்கடைகளில் இருந்த குளிர்பானங்களை அவர் சோதனை செய்தார். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், நடைபாதைக் கடைகளை கிரிவலப் பாதையில் இருந்து சற்று உள்நகர்த்தி அமைக்க அறிவுறுத்தினார்.
தரமில்லாத குளிர்பானங்களை விற்றாலோ, நடைபாதையில் கடைகள் அமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
Comments