பெண்ணைத் தாக்கிவிட்டு ஆடு திருடிய இளைஞர்கள்.. சேஸ் செய்து தர்ம அடி கொடுத்த மக்கள்..!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த அணைப்பாளையத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாப்பாத்தி என்பவரை தாக்கிவிட்டு, 2 இளைஞர்கள் ஆடு ஒன்றைத் திருடிக்கொண்டு பல்சர் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளனர்.
அவர்களை விரட்டிச் சென்ற அப்பகுதி மக்கள் தொட்டிப்பாளையம் அருகே பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்தவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஒரு திருடன் படுகாயமடைந்து மயங்கியுள்ளான். பின்னர் இருவரும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Comments