என்.எஸ்.எஸ் பயிற்சி என்கிற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - நா.த.க நிர்வாகி மீது பாய்ந்த போக்சோ

0 523

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், என்.எஸ்.எஸ் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் உடன் என் எஸ் எஸ் முகம் நடைபெற்று வந்த போது மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகளின் உறவினர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் இதனை மூடி மறைக்கவும் மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை மிரட்டியதாக புகார் எழுந்தது.

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் சைல்ட் லைன் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர் பின்னர் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிவராமனின் உறவினர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள சிவராமன் பல பள்ளிகளில் என்.எஸ்.எஸ் பயிற்சி அளித்து வந்ததாகக் கூறப்படுகிற நிலையில், விசாரணை தொடர்கிறது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments