இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து..பைக்குகளை ஓட்டி வந்தவர்கள் பலி..
திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில், 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி, அவற்றை ஓட்டி வந்த இருவரும் வாகனங்களோடு தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் உடன்குடிக்கு பைக்கில் சென்றார். மற்றொரு பைக்கில், நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்த வனம் என்பவர், தனது நண்பருடன் குலசேகரப்பட்டினத்திற்கு, அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
கல்லாமொழி அருகே, 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி, தூக்கி வீசப்பட்டு விழுந்து நொறுங்கிய விபத்தில், 2 வாகனங்களையும் ஓட்டிவந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வனத்துடன் வந்த அவரது நண்பர் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Comments