தேவநாதனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை.. நிதி நிறுவனம், தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு சீல்..

0 299

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதனுக்குச் சொந்தமான 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தியாகராயநகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நபர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனையில் 4 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், நிதி நிறுவனம், தொலைக்காட்சி அலுவலகம், தேவநாதனின் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments