கேலிக்குள்ளான G.O.A.T விஜய்.. பகிரங்கமாக போட்டுடைத்த VP.. கில்லிய மறக்க முடியலீங்க என்கிறார்..! மகாத்மா காந்தியை கேவலப்படுத்தலாமா ?

0 1093
கேலிக்குள்ளான G.O.A.T விஜய்.. பகிரங்கமாக போட்டுடைத்த VP.. கில்லிய மறக்க முடியலீங்க என்கிறார்..! மகாத்மா காந்தியை கேவலப்படுத்தலாமா ?

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள G.O.A.T படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முன்னதாக வெளியான ஸ்பார்க் பாடலில் இடம் பெற்ற விஜய்யின் டி.ஏஜிங் உருவத்தை ரசிகர்கள் கேலி செய்ததால் அதனை மாற்றி உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள G.O.A.T படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் 1 கோடி பார்வைகளை தாண்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது

படத்தில் தந்தை மகனாக இரட்டை வேடத்தில் தோன்றும் விஜய்யுடன், ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

மங்காத்தா, பீஸ்ட் மற்றும் பல ஹாலிவுட் படங்களின் அதிரடி சண்டைக் காட்சிகளையும் நினைவூட்டும் வகையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருப்பதாக G.O.A.T படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் வெட்ங்கட் பிரபு, ஸ்பார்க் பாடலில் இடம் பெற்ற விஜய்யின் டி.ஏஜிங் உருவத்தை ரசிகர்கள் பலரும் கேலி செய்ததால் , பல முயற்சிகளுக்கு பின்னர் அதனை முழுவதுமாக தற்போது டிரைலரில் உள்ளது போல மாற்றி உள்ளதாக தெரிவித்தார்

விஜய்யை கமர்ஷியல் படங்களில் பார்க்க வேண்டும் என்ற அனைவரின் தாகமும் இந்த படத்தில் தீரும் என்ற வெங்கட்பிரபு, மோகனை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்ட வேண்டும் என்ற தனது ஆசை இந்த படத்தில் சாத்தியமானதாக தெரிவித்தார்

படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு காந்தி என்று பெயரிட்டு குடிப்பது போலவும், பெண்கள் பின்னால் சுற்றுவது போலவும் காட்டப்பட்டுள்ளதே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனது நெருங்கிய நண்பரின் பெயர் கூட காந்தி தான் என்ற வெங்கட்பிரபு, அவரை மையமாக வைத்து தான் கதையில் விஜய்க்கு காந்தி என பெயர் வைத்துள்ளேன். ஏன் காந்தி கலவரம் செய்கிறாரா? குடிக்கிறாரா? ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்? என்று கலகலப்பாக பேசி சமாளித்தார்

இந்தப்படம் 6,000 திரையரங்குகளில் வெளியாவதாக கூறிய படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, செப்டம்பர் 5ந் தேதி வெளியாவதாகத் தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தில் உங்கள் தம்பி பிரேம்ஜியை எம்.எல்.ஏ வேட்பாளராக களம் இறக்க உள்ளீர்களா? என்ற கேள்விக்கு வீட்டில் அமர்ந்து பேசி முடிவு செய்வதாக வெங்கட் பிரபு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments