காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் காவல் ஆய்வாளரை தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குத்தாலம் காவல் ஆய்வாளர் ஜோதிராமனின் வாகனத்திற்கு வழி தராமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த கிஷோரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு காவல் நிலையம் வரச் சொல்லியுள்ளார். கிஷோருடன் வந்த அவரது தந்தை மகேஸ்வரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் ஆய்வாளர் ஜோதி ராமனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Comments