பணம் நகைகள் கொள்ளை.. காவல்துறையின் ரோந்தில் சிக்கிய தந்தையும் மகனுமான கொள்ளையர்கள்

0 211

ராணிப்பேட்டை மாவட்டம் வேம்பி பகுதி அருகே வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 28 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments