கோயில் கொடை விழாவில் அண்ணன், தம்பி குத்திக் கொலை.. என்ன காரணம்..?

0 395

நெல்லை மாவட்டம் காரம்பாடு கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொடைவிழாவில் கரகாட்டம் நடைபெற்ற போது இளைஞர்கள் சிலர் பணம் வசூலித்து அன்பளிப்பாக கரகம் ஆடியவர்களுக்கு கொடுத்துள்ளனர்.

இனாம் அளித்தவர்கள் பெயரை மேடையில் வாசித்த போது மதியழகன் பெயர் விடுபட்டதாக கூறப்படுகிறது. தனது பெயர் விடுபட்டது குறித்து மதியழகன் கேள்வி கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மதியழகன் அவரது சகோதரர் மதிராஜா ஆகியோர் குத்திக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க வந்த உறவினரான மகேஸ்வரன் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகராறில் ஈடுபட்ட இருதரப்பினரும் கஞ்சா போதையில் இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments