நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பயங்கரவாதம், பிரிவினைவாதம் கடும் அச்சுறுத்தல்கள் - உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற தெற்குலக நாடுகளின் உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர், உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில் உணவு, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது பெரிய சவாலாக உள்ளதாக குறிப்பிட்டார். பொதுவான இலக்கை அடைய தெற்குலக நாடுகள் ஒன்றுக்கொன்று துணை நின்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
Comments