ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

0 878

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர், செப்டம்பர் 18, 25, மற்றும் அக்டோபர் ஒன்று என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவித்தார்.

90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்துக்கு அக்டோபர் ஒன்றாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்படும் என ராஜீவ் குமார் தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தேர்தல் என்பதால், பாதுகாப்பு படைகளின் தேவை அதிகமாக இருக்கும் என்பதாலும், பருவமழை, பண்டிகைகள் காரணமாக மகாராஷ்டிராவிற்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை.

மகாராஷ்டிராவுக்கும், ஜார்க்கண்ட்க்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY