திருநெல்வேலியில் மெதுவாக சென்ற லாரியின் மீது பின்னால் அதிவேகமாக வந்து மோதிய கார் பெண் உயிரிழப்பு

0 359

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி பாலத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த 12 சக்கரங்கள் கொண்ட சிமெண்ட் லாரியின் பின்னால் வேகமாக வந்த Fortuner கார் மோதியதில் அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார்.

பணகுடியை சேர்ந்த ராஜன் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும் போது அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்சீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ராஜனும், ஓட்டுநரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரின் முன்பகுதி நசுங்கிய நிலையில், கார் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக லாரியின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments